×

குடிதண்ணீர் கேட்டு கலெக்டரிடம் மனு

 

தேனி, பிப். 16:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கை குழந்தைகளுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவினை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தனர். இது குறித்து பெண்கள் கூறும் போது, ஏத்தக்கோயிலில் சாவடித் தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் சுமார் இரண்டு ஆண்டு காலமாக குடிதண்ணீர் முறையாக விநியோகிப்பது இல்லை.

குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலையில் இருந்து வருகிறோம். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் பலன் இல்லை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் கிராமத்தை ஒட்டி உள்ள பகுதியில் இருக்கும் சூழல் உள்ளது கிணற்று நீர் மாசடைந்து உள்ளதால் குடிநீரை பருகுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பல்வேறு கோவிலுக்கு ஆளாக கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது எங்கள் கிராமப் பகுதிக்கு குடிநீரை சீராக வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

The post குடிதண்ணீர் கேட்டு கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Theni ,Ethakkoil ,Andipatti ,Theni District Collector ,Collector ,Shajivana ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே சாலை சீரமைப்பு பணியின் தரம் ஆய்வு